Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • எப்போதும் சண்டை போடும் கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ இந்த விளக்கை வீட்டிலே ஏற்றினாலே போதும்

எப்போதும் சண்டை போடும் கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ இந்த விளக்கை வீட்டிலே ஏற்றினாலே போதும்

By: vaithegi Sun, 20 Aug 2023 5:37:58 PM

எப்போதும் சண்டை போடும் கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ இந்த விளக்கை வீட்டிலே ஏற்றினாலே போதும்

இன்றைய காலக்கட்டத்தில் கணவன் மனைவி ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ்வதே பெரும் கனவாக தான் இருக்கிறது. எப்பொழுது பார்த்தாலும் ஒரே பிரச்சனை, மனஸ்தாபங்கள் போன்றவை எழுந்து எந்நேரமும் குடும்பத்திற்குள் சண்டை சச்சரவுமாக நிம்மதியே இல்லாத ஒரு வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலை மாறி கணவன் மனைவி இருவரும் அன்னோன்யமாக வாழ இந்த ஒரு எளிய தீப பரிகாரத்தை செய்யலாம் என்று ஆன்மீகம் சொல்கிறது.

சில நேரங்களில் இருவரும் நல்ல அன்புடன் இருந்தாலுமே கூட நேரில் பார்த்துக் கொள்ளும் போது ஒருவர் மீது ஒருவருக்கு எந்த ஈர்ப்பும் இல்லாமல் வெறுப்பு உண்டாகும். மேலும் அது மட்டும் இன்றி காரண காரணமே இல்லாமல் சண்டை வரும். சிறிது நேரம் கழித்து யோசித்தால் எதற்கு இந்த சண்டை போட்டோம் என்று அவர்களுக்கே தெரியாது. இப்படியான சூழ்நிலைகளுக்கு நம்முடைய கிரக நிலைகளும் நம்மை தாக்கும் எதிர்மறை ஆற்றல்களும் காரணம் என்று நம்பப்படுகிறது. அதை சரி செய்வதற்கான ஒரு பரிகாரம் தான் இந்த தீபம்.

ஒற்றுமையாக வாழ தீபம் இந்த தீபத்தை நாம் துர்க்கை அம்மனை நினைத்து ஏற்ற வேண்டும். இது போல கிரக தோஷங்களையும் எதிர்மறை ஆற்றல்களையும் நீக்கி குடும்ப ஒற்றுமைக்கு பெரிதும் துணையாக காத்து நிற்பவள் துர்க்கை. அந்த அன்னையை மனதார வணங்கி இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை நாம் கோவில்களுக்கு சென்று ஏற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வீட்டிலே ஏற்றி இருந்த இடத்திலே இருந்தபடியே வணங்கினாலே போதும். நம்முடைய குடும்பத்தில் அமைதி நிலவும்.

husband,wife,parikaram,deepam , கணவன் ,மனைவி,பரிகாரம் ,தீபம்

இந்த தீபம் துர்க்கை அம்மனுக்கு ஏற்றப்படுவதால் இதற்கு செவ்வாய்க்கிழமை ராகு காலம் நேரமே மிகவும் உகந்தது. இந்த நேரத்தில் உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரே ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக அரிந்து அதன் சாறை பிழிந்து விட்டு பாதி எலுமிச்சை பழத்தில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். அதாவது ஒரே ஒரு எலுமிச்சைப்பழம் தீபம் ஏற்றினால் போதும். இந்த தீபத்தை ஏற்றி வைத்து அந்த தீபத்தின் முன்ன அமர்ந்து உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் சரியாக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

இத்தீபமானது ராகுகால நேரம் முடியும் வரை வீட்டில் எறிந்தால் மிகவும் நல்லது. அதன் பிறகு இந்த தீபம் ஏற்றிய எலுமிச்சை பழத்தோலை யார் காலிலும் படாதவாறு தூக்கி வெளியே போட்டு விடுங்கள். இதே போல் ஒன்பது செவ்வாய்க்கிழமை தொடர்ந்து இந்த தீபத்தை ஏற்றும் பொழுது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கி கணவன் மனைவிக்குள் ஒற்றுமை மேம்படும்.

Tags :
|