Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • யாழ். தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய கைலாச வாகன உற்சவம்

யாழ். தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய கைலாச வாகன உற்சவம்

By: Nagaraj Sat, 29 Aug 2020 12:00:53 PM

யாழ். தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய கைலாச வாகன உற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் கைலாச வாகன உற்சவம் நேற்று மாலை சிறப்பாக நடந்தது.

பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமான கைலாசவாகன உற்சவத்தில் வசந்தமண்டப பூசைகள் ஆரம்பமாகி இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து துர்க்கையம்பாள் சிவலிங்கப் பெருமான் சமேதரராக எழுந்தருளியதுடன், விநாயகப் பெருமான், முருகப் பெருமான், சண்டேஸ்வரர் ஆகிய தெய்வங்களும் உள்வீதியில் வலம் வந்தனர்.

துர்க்கையம்பாள் சிவலிங்கப் பெருமான் சமேதராகவும், விநாயகப் பெருமான், முருகப் பெருமான், சண்டேஸ்வரர் ஆகிய தெய்வங்களும் ஆலய முன்றலில் நிறுத்தப்பட்டிருந்த கைலாசவாகனத்தில் எழுந்தருளினர்.

slaves,kailash vehicle,thiruppavani,bajna ,அடியவர்கள், கைலாச வாகனம், திருப்பவனி, பஜனை

தொடர்ந்து ஆலயத்தின் காண்டாமணி ஒலிக்க, அடியவர்களின் அரோகரா கோஷம் ஒலிக்க கைலாசவாகனத் திருப்பவனி ஆரம்பமானது. கைலாசவாகனத் திருப்பவனி ஆரம்பமாகும் போது ஆலயத்தின் கோபுரத்திலிருந்து பூமாரி தூவப்பட்டது.

கைலாச வாகனத்தை ஆண் அடியவர்களும், பெண் அடியவர்களும் இணைந்து வடம் தொட்டிழுத்தனர். அத்துடன் துர்க்காபுரம் மகளிர் இல்லச் சிறார்களும், அடியவ்ர்கள் பலரும் பஜனை பாடியவாறு கைலாச வாகனத் திருப்பவனியில் கலந்து கொண்டனர்.

பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கைலாசவாகனத் திருப்பவனியில் பக்திபூர்வமாக கலந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags :
|