Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதியில் ஜனவரி தரிசன சேவை டிக்கெட் இந்த தேதி வெளியீடு என அறிவிப்பு

திருப்பதியில் ஜனவரி தரிசன சேவை டிக்கெட் இந்த தேதி வெளியீடு என அறிவிப்பு

By: vaithegi Fri, 13 Oct 2023 10:11:17 AM

திருப்பதியில் ஜனவரி தரிசன சேவை டிக்கெட் இந்த தேதி வெளியீடு என அறிவிப்பு

திருப்பதியில் ஜனவரி தரிசன சேவை டிக்கெட் இந்த தேதி வெளியீடு என அறிவிப்பு

திருப்பதி : ஜனவரி தரிசன சேவை டிக்கெட் வருகிற அக்.18ம் தேதி வெளியீடு ... திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 2024 -ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான கட்டண சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு பற்றி இந்த மாதம் பல்வேறு நாட்களில் ஆன்லைனில் வெளியீடும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஜனவரி மாதத்திற்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்ம ஆராதனை சேவைகளுக்கு, அக்டோபர் 18ஆம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபர் 20ஆம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் லக்கிடிப் ( குலுக்கல் ) மூலம் தேர்தெடுக்கும் டிக்கெட் பதிவு செய்யலாம்.

இதனை அடுத்து குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் 22-ம் தேதி மதியம் 12 மணிக்குள் டிக்கெட்டிற்கு உண்டான பணம் செலுத்தி ஆன்லைனில் பெற்று கொள்ளலாம். கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் 21ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். இதே சேவைக்கான டிக்கெட்டில் நேரடியாக சேவையில் பங்கேற்காமல் சுவாமி தரிசனத்திற்கு மட்டும் டிக்கெட்டுகள் 21 அன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.

darshan service ticket,tirupati ,தரிசன சேவை டிக்கெட் ,திருப்பதி

மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கி வி.ஐ.பி. தரிசனம், அறைகள் பதிவு செய்ய 23ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டோக்கன்கள் 23ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். 24ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் வெளியிடப்படும். திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான அறைகள் முன்பதிவு 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

இதனை அடுத்து டிசம்பர் மாதத்திற்கான, திருமலை, திருப்பதியின் ஸ்ரீவாரி சேவா தன்னார்வலதாக சேவை அக்டோபர் 27 அன்று காலை 10 மணிக்கும், சுவாமிக்கு வெண்னை தயார் செய்ய நவனிதா சேவா தன்னார்வலராக பங்கேற்க 12 மணிக்கும், உண்டியல் காணிக்கை எண்ணும் பரக்காமணி சேவா தன்னார்வலராக பங்கேற்க பிற்பகல் 3 மணிக்கும் வெளியிடப்படும். எனவே பக்தர்கள் https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் தங்களுக்கு தேவையாம டிக்கெட்டுகளை, சேவையில் பங்கேற்க முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் வெளியிடு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :