Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்

கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்

By: Nagaraj Thu, 17 Sept 2020 8:05:07 PM

கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்

வருடாந்த உற்சவம்... கிழக்கில் வரலாற்றுப் பிரசித்திபெற்றதும், நீண்டகாலத் தொன்மை வாய்ந்ததுமான அம்பாறை கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 15ம் தேதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.

இவ்வாலயத்தில் 18 நாட்கள் மகாபாரத வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சடங்குகள் சிறப்பாக இடம்பெறும். கொரோனா பரவல் காரணமாக இம்முறை சுகாதார நடைமுறைகளுடன் பூசைகள், திருவிழாக்கள் இடம்பெறவுள்ளது.

fire pit,veerakumbam,thavanilai,going to the forest ,தீக்குழி, வீரகும்பம், தவநிலை, வனவாசம் செல்லுதல்

திருவிழாவில் நடக்கும் நிகழ்ச்சிகள் விபரம் வருமாறு: 21.09.2020 (திங்கட்கிழமை) சுவாமி எழுந்தருளல், 22.09.2020 (செவ்வாய்கிழமை) நாட்கால் வெட்டுதல், 26.09.2020 (சனிக்கிழமை- மாலை) கல்யாணக்கால் வெட்டுதல், 30.09.2020 (புதன்கிழமை- பகல்) வனவாசம் செல்லுதல், 01.10.2020 (வியாழக்கிழமை- இரவு) அருச்சுனர் பாசுபதம் பெறும் தவநிலை ஆகியவை நடக்கிறது.

இதேபோல் 02.10.2020 (வெள்ளிக்கிழமை- அதிகாலை) வீரகும்பம், தீமிதிப்பு (பிற்பகல்), 03.09.2020 (சனிக்கிழமை- பகல்) தருமருக்கு முடி சூட்டுதல் ,தீக்குளிக்கு பால் வார்த்தல் ஆகியவை நடக்கிறது.
இதேவேளை, இலங்கையில் உள்ள ஆலயங்களுள் நீளமான (18 அடி) தீக்குழி இவ்வாலயத்திலேயே உள்ளமை சிறப்பம்சமாகும்.

Tags :