Advertisement

காமனை சிவபெருமாள் எரித்த கொற்கை தலம்

By: Nagaraj Tue, 13 Dec 2022 11:33:19 PM

காமனை சிவபெருமாள் எரித்த கொற்கை தலம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கொற்கையில் அமைந்துள்ளது வீரட்டேஸ்வரர் கோயில். அம்மன் ஞானம்பிகை. உற்சவர் யோகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் சிவபெருமான் காமனை எரித்தார் என்பது வரலாறு.

இத்தலத்தில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தப்படுகிறது. திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம். அட்டவீரட்டத்தலங்களில் ஒன்று. தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 26வது தலம்.

இக்கோயிலில் கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துகிறார்கள். அம்மனுக்கு புடவை சாத்துதலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்தி கடன்களாக உள்ளது. இத்தலத்தில் சிவபெருமான் தியானம் செய்து கொண்டிருந்தார். இதனால் உலகம் வெப்பத்தால் தகித்தது. தேவர்கள் முருகப்பெருமானிடம் முறையிட அவரோ தன்னால் தந்தையின் தவத்தை கலைக்க முடியாது என்று ஒதுங்கிக் கொண்டார்.

மன்மதனிடம் சென்று எப்படியாவது சிவபெருமானின் தியானத்தைக் கலைக்க தேவர்கள் கோரினர். மன்மதனும் நடக்கப்போவது தெரியாமல் தன்னிடம் உள்ள வில்லை எடுத்து சிவபெருமான் மீது தன் கணைகளைத் தொடுத்தார். அது புஷ்பமாக மாறி வந்து விழுகிறது. இதானல் சிவபெருமான் நெற்றிக்கண்ணால் மன்மதனை சுட்டு எரிக்க சாம்பலானான் மன்மதன். என் கணவரை மீட்டுத்தாருங்கள் என்று ரதி சிவனிடம் வேண்டி நிற்க உனது வேண்டுகோளுக்காக ஒருநாள் மட்டும் மன்மதனை உண்டு பண்ணி தேய்பிறையில் தெய்வலோகத்திற்கு அனுப்பிவிடுவதாக சிவபெருமான் கூறுகிறார். அதன்படி மன்மதன் உயிர்பெற்றதாக வரலாறு கூறுகிறது.

kaman,lord shiva,kamadagana murthy,valakai,abhayam ,காமன், சிவபெருமான், காமதகன மூர்த்தி, வலக்கை , அபயம்

பெருமாளின் புத்திர சோகத்தை போக்கியதால், இத்தலத்தில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தப்படுகிறது. இத்தலத்தில் சிவன் யோக மூர்த்தியாக இருப்பதால் எளிதாகப் பார்க்க இயலாது. ஏதாவது தடங்கல் வரும். அதையும் மீறி நாம் சுவாமியை தரிசித்து விட்டால் நமக்கு யோக நிலை கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்குள்ள குறுங்கை கணபதிக்கு மட்டும் இங்கு கஜபுஷ்ட விமானம் இருக்கும். பூர்வ ஜென்ம தோஷ பரிகாரம், புத்திர காமேஷ்டி யாகம், 70 வயதில் செய்யக்கூடிய பீமரதசாந்தி கல்யாணம் ஆகியவை இத்தலத்தில் நடக்கிறது.

யோகேஸ்வரரை வணங்கினால் இழந்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்கும், காம குரோதங்கள் விலகும். அட்டவீரட்டத்தலங்களில் இங்கு சிவபெருமான் காமனை எரித்ததால் “காம தகன மூர்த்தி” என்றும் அழைக்கப்படுகிறார். காம தகன மூர்த்தி இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு வலக்கை அபய முத்திரையுடன், இடக்கையை மடக்கிய கால் மீது வைத்து அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார். எதிரே மன்மதன், ரதி உள்ளனர். மன்மதன் கையில் கரும்பு வில் உள்ளது. இங்கு ரதி இறைவனை வேண்டுவதுபோல் சிற்பம் உள்ளது.

தீர்த்தவாகு முனிவர் இறைவனுக்கு திருமுழுக்காட்ட கங்கையை கொண்டு வந்த சிறப்பு பெற்ற தலம். காமனைத் தகனம் செய்த இடம், இங்கு விபூதிக்குட்டை என்று ஒரு குளமாக உள்ளது. இதில் எங்கு எடுத்தாலும் திருநீறாகவே உள்ளது என்பது வியப்பாகும். இத்தலத்திற்கு யோகீசபுரம் , காமதகனபுரம் , கம்பகரபுரம் என பல பெயர்கள் உண்டு.

இந்த ஊரை சுற்றியுள்ள ஊர்கள் இத்தலத்து வரலாற்றோடு சம்பந்தப்பட்டவை. அதாவது சிவபெருமானின் தவத்தை கலைக்க மன்மதன் தன் கையில் கங்கணம் கட்டிக் கொண்ட இடம் கங்கணம் புத்தூர். பால் சாப்பிட்ட இடம் பாலாக்குடி. வில் எடுத்த இடம் வில்லினூர். குறி பார்த்த இடம் காவளமேடு. மன்மதனோடு வந்தவர்கள் ஐவநல்லூரில் கூடி இங்கிருந்து வில் விடு என்று கூறினார்களாம். அந்த இடம் சரியாக இல்லை என்று கூறி மேட்டுக் கொற்கை என்ற இடத்துக்கு வந்து நின்று குறி பார்க்கையில் பின்பக்கமிருந்தும் இல்லாது முன்பக்கமிருந்தும் இல்லாது ஒரு ஓரமாக நின்று மன்மதன் கணை விட்டாராம். இவ்வாறு ஊர்களின் பெயர்கள் இத்தலத்தோடு சம்பந்தப்பட்டுள்ளது. இக்கோயிலில் காமதகன விழா 10 நாட்கள் திருவிழா விழாவாக நடக்கிறது நவராத்திரி மற்றும் மாதாந்திர பிரதோஷம் ஆகியவை சிறப்பாக நடக்கிறது.

Tags :
|