Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று மாலை தொடக்கம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று மாலை தொடக்கம்

By: vaithegi Tue, 14 Nov 2023 11:31:49 AM

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று மாலை தொடக்கம்

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் 17 நாட்கள் நடைபெறும். இந்தாண்டும், காவல்தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் இன்று மாலை தொடங்குகிறது. இதையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக்கொடி மரத்தில் வருகிற 17-ம் தேதி அதிகாலை 4.45 மணி முதல் 6.12 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறவுள்ளது.

அதன் பிறகு, பஞ்சமூர்த்தி களின் 10 நாள் உற்சவம் தொடங்கி காலை மற்றும் இரவு நடைபெறும்.வரும் நவ.22-ம் தேதி காலை 63 நாயன்மார்களின் உற்சவமும், அன்றிரவுவெள்ளி தேரோட்டமும் நடை பெறும்.

karthikai deepa festival,tiruvannamalai,annamalaiyar temple ,கார்த்திகை தீபத் திருவிழா,திருவண்ணாமலை,அண்ணாமலையார் கோயில்

10 நாள் உற்சவத்தின் முக்கியநிகழ்வான மகா தேரோட்டம், வரும் 23-ம் தேதி காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் தொடங்குகிறது.மேலும் வரும் நவ.24-ம் தேதி மாலை 4 மணியளவில் தங்கமேருவில் பிச்சாண்டவர் உற்சவம் நடைபெறும்.

இதையடுத்து இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத் திருவிழா நவ.26-ம்தேதி நடைபெறவுள்ளது. மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்படும். பஞ்சபூதங்களும் பரம்பொருளே என்பதை உணர்த்த, ஏகன் - அநேகன் தத்துவம் மூலம் எடுத்துரைக்கப்படும். அதன்பிறகு, பிரம்மதீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.


Tags :