Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • கரூர் வேம்பு மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு

கரூர் வேம்பு மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு

By: Nagaraj Sat, 12 Aug 2023 09:52:08 AM

கரூர் வேம்பு மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு

கரூர்: கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அன்னை கர்ப்பரட்சாம்பிகை அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

devotees,decoration,karur,last friday,maha deeparathana ,பக்தர்கள், அலங்காரம், கரூர், கடைசி வெள்ளி, மகா தீபாராதனை

அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு நறுமண பூக்களால் அன்னை கர்ப்ப ரட்சாம்பிகை அலங்காரம் நடைபெற்றது பின்னர் சுவாமிக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு பஞ்ச கற்பூர ஆலத்தையுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமி அலங்காரத்தை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள், பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர் .

Tags :
|