Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • பல்வேறு வகையான தானங்களும் அவற்றின் பலன்களும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பல்வேறு வகையான தானங்களும் அவற்றின் பலன்களும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By: Nagaraj Tue, 20 June 2023 9:08:33 PM

பல்வேறு வகையான தானங்களும் அவற்றின் பலன்களும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: உடல் நலிவுற்றோர்கள் மற்றும் இயலாத சூழலில் வாழ்பவர்க்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து, நாம் அவர்களின் இன்பங்களின் மூலம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளான இறைவனை காண்போம்

பல்வேறு வகையான தானங்களும் அவற்றின் பலன்களும் பற்றி தெரிந்து கொள்வோம்.

அன்ன தானம் செய்தால் கடன் தொல்லைகள் நீங்கும். அரிசி தானம் செய்தால் முன்ஜென்ம பாவங்கள் விலகும். ஆடைகள் தானம் செய்தால் சுகபோக வாழ்வு அமையும். பால் தானம் செய்தால் துன்பங்கள் விலகும்.

நெய் தானம் செய்தால் பிணிகள் நீங்கும். தேங்காய் தானம் செய்தால் எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிட்டும். தீப தானம் செய்தால் முன்னோர்களின் ஆசிகள் கிட்டும். தேன் தானம் செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.

donations,benefits,oil donation,health,rishikadan,akalum ,தானங்கள், பயன்கள், எண்ணெய் தானம், ஆரோக்கியம், ரிஷிக்கடன், அகலும்

பூமி தானம் செய்தால் பிறவா நிலை உண்டாகும். பழங்கள் தானம் செய்தால் மன அமைதி உண்டாகும். வஸ்திர தானம் செய்தால் ஆயுள் விருத்தி உண்டாகும். கம்பளி தானம் செய்தால் வெண்குஸ்ட நோய்களின் அறிகுறிகள் தென்பட்டால் அதிலிருந்து மீண்டு விடலாம்.

கோ தானம் செய்தால் பித்ரு கடன் நீங்கும். தயிர் தானம் செய்தால் இந்திரிய விருத்தி உண்டாகும். நெல்லிக்கனி தானம் செய்தால் அறிவு மேம்படும். தங்கம் தானம் செய்தால் தோஷம் நிவர்த்தியாகும். செய்தால் வெள்ளி தானம் செய்தால் கவலைகள் நீங்கும். கோதுமை தானம் செய்தால் ரிஷிக்கடன் அகலும். எண்ணெய் தானம் செய்தால் ஆரோக்கியம் உண்டாகும்.

Tags :
|