Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

By: vaithegi Mon, 03 July 2023 10:05:47 AM

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை: உலகப் பிரசித்தி பெற்ற நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டு கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையை சிவனாக எண்ணி 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள்.

இதையடுத்து ஆனி மாத பௌர்ணமியான நேற்று இரவு 07.46 மணிக்கு தொடங்கி இன்று மாலை 05: 46 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான லட்சக்கணக்கான பக்தர்கள் காலையிலேயே திருவண்ணாமலை வருகை தந்து 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் உள்ள இந்திரலிங்கம், அக்னி லிங்கம், குபேர லிங்கம் உள்ளிட்டஅஷ்ட லிங்கங்களை வழிபட்டு திருநேர் அண்ணாமலையார், அடி அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோவில்களிலும் தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் அண்ணாமலைக்கு அரோகரா ஓம் நமச்சிவாயா என்ற பக்தி முழக்கத்துடன் இரவு முழுக்க கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டனர்.

devotees,thiruvannamalai ,பக்தர்கள் ,திருவண்ணாமலை

கிரிவலம் வரும் ஆன்மீக பக்தர்களின் வசதிக்காக 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதை முழுவதும் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் அனைவரும் பாதுகாப்புடன் கிரிவலம் செல்ல ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.

மேலும் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு கிரிவலப் பாதையில் குடிதண்ணீர் மற்றும் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதேபோன்று 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் மிக சிறப்பாக செய்திருந்தனர்.

Tags :