Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • கடந்த வெள்ளிக்கிழமை 76 ஆயிரம் பக்தர்கள் திருப்பதியில் சுவாமி தரிசனம்

கடந்த வெள்ளிக்கிழமை 76 ஆயிரம் பக்தர்கள் திருப்பதியில் சுவாமி தரிசனம்

By: Nagaraj Sun, 19 June 2022 11:43:05 PM

கடந்த வெள்ளிக்கிழமை 76 ஆயிரம் பக்தர்கள் திருப்பதியில் சுவாமி தரிசனம்

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை 76,407 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 39,938 பேர் முடிகாணிக்கை செலுத்தினா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் பக்தா்களின் வருகை வெகுவாக அதிகரித்தது. இதையடுத்து பக்தா்களை டிக்கெட் இல்லாமல் தேவஸ்தானம் திருமலைக்கு அனுப்பி வருகிறது. பக்தா்கள் தங்கள் ஆதாா் அட்டையை காண்பித்து வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

சனிக்கிழமை காலை நிலவரப்படி, திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 32 காத்திருப்பு அறைகளும் நிறைந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா்.

darshan,devotees,tirupati,complaint,difficulties ,தரிசனம், பக்தர்கள், திருப்பதி, புகார், சிரமங்கள்

இதில், தா்ம தரிசனத்துக்கு 10 மணி நேரம் வரை ஆனது. ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 2 முதல் 3 மணி நேரம் தேவைப்பட்டது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

Tags :