Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • கலியுகத்தின் கடைசி நாளை தீர்மானிக்கும் தூண் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

கலியுகத்தின் கடைசி நாளை தீர்மானிக்கும் தூண் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By: Nagaraj Fri, 27 Nov 2020 7:23:25 PM

கலியுகத்தின் கடைசி நாளை தீர்மானிக்கும் தூண் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

கலியுகத்தின் கடைசி நாளை தீர்மானிக்கும் தூண். இந்த தூண் விழும்போது உலகம் அழிந்துவிடுமாம். இந்த தூண் எங்கு உள்ளது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள்.

மர்மம் நிறைந்த கோவிலான கேதரேஸ்வரர் குகை கோவில் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு சிவன் கோவிலுக்கும் பின்னாலும் ஏதாவது திருவிளையாடல்களும் வேறு சில காரணங்களும் இருக்கும். அவற்றில் நிறைய மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலே தான் இருக்கின்றன.

அவற்றில் மிக முக்கியமான ஒன்று தான் ஹரிஷ் சந்திரேஸ்வரர் சிவன் கோவில். இந்த கோவிலைச் சுற்றிலும் ஏராளமான மர்மங்கள் நிறைந்திருக்கின்றன. இந்த மர்மங்கள் நிறைந்த குகை கோயில் மகாராஷ்டிர மாநிலத்தில் தான் இருக்கிறது. ஆறாம் நூற்றாண்டில் கலாசூரி என்னும் மன்னனால் கட்டப்பட்ட அதிசயக் கோவில் தான் இந்த ஹரிஸ் சந்திரேஸ்வரர் கோவில்.

kali yuga,pillar,only one,the end of the age,the universe ,கலியுகம், தூண், ஒரே ஒரு, யுகம் முடிவடையும், பிரபஞ்சம்

இந்த கோவில் மட்டுமல்ல. இதற்கு மிக அருகிலேயே கேதாரேஸ்வரர் என்னும் அதிசயங்களும் மர்மங்களும் நிறைந்த குகை ஒன்று இருக்கிறது. இந்த குகை மற்ற குகைகளைப் போல அல்ல. தண்ணீர் நிறைய இருக்கும். அந்த நீருக்கு நடுவே ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக ஒரு சிவலிங்கம் வீற்றிருக்கிறது. இந்த லிங்கத்தைச் சுற்றியிருக்கிற தண்ணீர் ஐஸ் கட்டியைப் போல மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.

இந்த தண்ணீரின் குளிரைத் தாண்டி சிவலிங்கத்தின் அருகில் சென்று வணங்குவது கொஞ்சம் கடினமான விஷயம் தான். குறிப்பாக மழைக்காலங்களில் எல்லாம் இந்த குகைக் கோவிலுக்குள் செல்வது பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது.

இந்த குகைக்குள் இருக்கிற சிவலிங்கத்தைச் சுற்றி நான்கு தூண்கள் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தூண்களும் நான்கு யுகங்களைக் குறிக்கிறதாம். சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் என்னும் நான்கின் அடையாளமாகத் தான் அந்த நான்கு தூண்கள் அமைந்திருக்கின்றன.

ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும், ஒவ்வொரு தூணாக கீழே விழும் என்பது தான் நியதியாகும். அதன்படி ஏற்கனவே மூன்று தூண்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் விழுந்து விட்டனவாம். இன்னும் ஒரே ஒரு தூண் மட்டுமே மிச்சமிருக்கிறது. அந்த நான்காம் தூண் தான் கலியுகத்தைக் குறிக்கும் தூணாம். அந்த நான்காம் தூண் தான் இந்த பிரபஞ்சத்தையே தாங்கிக் கொண்டிருக்கிறதாம். இந்த தூண் விழும் நாள் தான் கலியுகத்தின் கடைசி நாளாக இருக்குமாம்.

Tags :
|