Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • ஆன்மீகத்தில் பெரும் பங்கு வகிக்கும் வெற்றிலை பற்றி தெரிந்து கொள்வோம்

ஆன்மீகத்தில் பெரும் பங்கு வகிக்கும் வெற்றிலை பற்றி தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Tue, 08 Nov 2022 6:34:15 PM

ஆன்மீகத்தில் பெரும் பங்கு வகிக்கும் வெற்றிலை பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: அறுசுவை உணவுக்கு பின் உண்ணும் ஒரு பாரம்பரிய வழக்கமாக உள்ள வெற்றிலை ஆன்மீகத்தில் மிகப்பெரும் சக்தி வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது.


அஜீரணக் கோளாறு எதுவும் ஏற்படாமல் உடலை பாதுகாக்கும் என்று மட்டுமே நம்பி வெற்றிலையை சாப்பிட்டு வருகிறோம். மேலும் வயதானவர்கள் பல பேர் வெற்றிலையை உண்பதையே வேலையாக வைத்துக் கொண்டு தினமும் அமர்ந்து சாப்பிடும் வழக்கத்தை கொண்டு உள்ளனர்.


நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதில் ஒரு அறிவியல் ரீதியிலும், ஆன்மிக ரீதிகளும் பார்த்து தான் ஒரு செயலை செய்து இருக்கிறார்கள். சரி அப்படி என்ன வெற்றிலையில் நன்மைகள் உள்ளன மேலும் வெற்றிலையை எவ்வாறு உண்ண வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


ஆன்மீகத்தில் வெற்றிலையின் பயன்கள் ஏராளம் உள்ளது. நம் பாட்டிகள் அனைவரும் வெற்றிலை போடும்போது ஒரு விஷயத்தை நாம் கவனித்து இருப்போம். அவர்கள் வெற்றிலையை எடுத்து அதில் உள்ள காம்பை நீக்கிவிட்டு பின்பு வெற்றிலை போடுவர் .

betel leaf,spirituality,poverty reduction,profit,sridevi ,வெற்றிலை, ஆன்மீகம், வறுமை குறையும், தனலாபம், ஸ்ரீதேவி

ஆனால் நம்மில் பல பேர் அதை எதற்கு என்று தெரியாமல் காம்பை விரும்பி சாப்பிடுவதும் உண்டு. ஆனால் அப்படி உண்பதால் நமக்கு எந்த நன்மைகளும் வராது ஏனென்றால் வெற்றிலையின் காம்பு என்பது மூதேவிக்கு உரிய பகுதியாகும்.

மூதேவியை நாம் உண்பதால் நமக்கு என்ன பயன் இருக்கும் என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள். அதையும் மீறி நீங்கள் வெற்றிலை காம்போடு சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு வறுமை ஏற்படும். செல்வ செழிப்பு குறைந்து மூதேவி குடி கொள்வாள் என்பது ஐதீகம். எனவே எப்பொழுதும் காம்பை அடியோடு நீக்கிவிட்டு பின்பு வெற்றிலை போடுங்கள்.

வெற்றிலையில் ஸ்ரீதேவி குடி கொண்டிருக்கும் பகுதியாக உள்ளது வெற்றிலையின் முனை. எனவே எப்பொழுதும் கவனமாக முனை ஒடிந்து இருக்கும் வெற்றிலையை உண்ணாதீர்கள். ஸ்ரீதேவியை நீக்கிவிட்டு நாம் செய்யும் செயல் அனைத்துமே நமக்கு எதிர்வினையை கொடுக்கும் ஸ்ரீதேவியால் ஏற்படும் செல்வ செழிப்பு நீங்கிவிடும். எனவே முனையுள்ள வெற்றிலையை கொண்டு வர ஸ்ரீதேவி தயாரின் அனுகிரகம் கிடைத்து வீட்டில் செல்வ செழிப்புடன் இருப்பீர்கள் வறுமை குறைந்து தன லாபம் கிடைக்கும்.

Tags :
|