Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • மனம் நிறைந்து பிரார்த்திப்போம் கிருஷ்ணரை... அருள் பெறுவோம் நிறைவாக!!!

மனம் நிறைந்து பிரார்த்திப்போம் கிருஷ்ணரை... அருள் பெறுவோம் நிறைவாக!!!

By: Nagaraj Sat, 08 Aug 2020 11:05:58 AM

மனம் நிறைந்து பிரார்த்திப்போம் கிருஷ்ணரை... அருள் பெறுவோம் நிறைவாக!!!

நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கிருஷ்ண பரமாத்மா அருள நாம் மனம் நிறைந்து பிரார்த்திப்போம்.

அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று,ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்-தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார். பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் கிருஷ்ணன் காட்சியளித்தான்.

krishna jayanti,longevity,health,grace,janmashtami ,கிருஷ்ண ஜெயந்தி, நீண்ட ஆயுள், ஆரோக்கியம், அருள்

பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சாதாரணக் குழந்தை வடிவானான். மூன்று வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணனின் இளம் வயது கழிந்தது.

தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி, பெற்றோரையும் விடுவித்தான் கிருஷ்ணன். அவதாரங்களுள் ஒருவரான `ஸ்ரீ கிருஷ்ண பகவானின் ஜென்மாஷ்டமி வரும் 1-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்படவிருக்கின்றது. அன்று மக்கள் இனிப்புகள், காரங்கள் செய்து குறிப்பாக சீடை வகைகள் பல செய்து கண்ணனுக்கு நிவேதனம் செய்து மகிழ்வர்.

krishna jayanti,longevity,health,grace,janmashtami ,கிருஷ்ண ஜெயந்தி, நீண்ட ஆயுள், ஆரோக்கியம், அருள்

அரிசி மாவினால் கண்ணனின் காலடிகளை இட்டு கோபாலனை தத்தம் இல்லங்களுக்குப் பெண்கள் அழைப்பர். அன்று பல கோவில்களில் “உறியடி” திருவிழா நடைபெறும்.

மங்களகரமான இந்நாட்களில் ஜகத்தில் உள்ள பக்தர்களுக்கு (மக்கள் அனைவருக்கும்) நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கிருஷ்ண பரமாத்மா அருள நாம் அவரை “கீத கோவிந்தம்”, “ஸ்ரீமந் நாராயணீயம்”, “ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம்” போன்ற பல ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்குவோம். “ஆயர்பாடி கண்ணனை ஆராதிப்போம்!

Tags :
|
|