Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • பழமையான சுயம்பு விநாயகர் கோவில் பற்றி தெரிந்து கொள்வோம்

பழமையான சுயம்பு விநாயகர் கோவில் பற்றி தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Sat, 24 Dec 2022 11:26:27 PM

பழமையான சுயம்பு விநாயகர் கோவில் பற்றி தெரிந்து கொள்வோம்

கர்நாடகா: சுயம்பு விநாயகர் கோவில்... கர்நாடக மாநிலத்தில் உள்ள தெற்கு பெங்களூர் பகுதியில் இருக்கும் பசவனகுடி கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சுயம்பு விநாயகர் கோவில் இருக்கிறது. இங்குள்ள விநாயகரை தொட்ட கணபதி, சக்தி கணபதி, சத்திய கணபதி என மக்கள் அழைக்கின்றனர்.


பெங்களூருவை நிர்மாணித்த முதலாம் கெம்பேகவுடா என்பவர் ஒரு இடத்தில் நிறைய பாறைகள் இருந்ததை பார்த்துள்ளார். அந்த பாறைகளில் சில வடிவங்கள் வரையப்பட்டுள்ளது.

decoration,temple,miracle,ganesha,18 feet high,butter ,
அலங்காரம், கோவில், அதிசயம், விநாயகர், 18 அடி உயரம், வெண்ணெய்

ஒரு பெரிய பாறையில் வரையப்பட்ட விநாயகர் ஓவியத்தை மையமாக வைத்து சிலையாக மாற்றும்படி அவர் உத்தரவிட்டதன் பேரில் இந்த விநாயகர் சிலையும், ஆலயமும் உருவாக்கப்பட்டதாக மக்கள் கூறுகின்றனர்.


சுமார் 16 அடி அகலத்திலும், 18 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் விநாயகரை 100 கிலோ வெண்ணையை முழுவதும் பூசி அலங்கரித்து, திராட்சை மற்றும் பாதாம் கொண்டு அலங்காரம் செய்வர். இதனை அடுத்து வெப்பம் நிறைந்து காணப்பட்டாலும் வெண்ணெய் அலங்காரம் உருகுவதில்லை என்பது இந்த கோவிலின் அதிசயம் ஆகும்.

Tags :
|