Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருச்செந்தூர் கோவிலில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூர் கோவிலில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

By: vaithegi Sat, 25 Feb 2023 10:20:09 AM

திருச்செந்தூர் கோவிலில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூர்: மாசித் திருவிழா தொடங்கியது .... முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

அதன் பின்னர் காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோவில் செப்பு கொடிமரத்தில் மாசித்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. மொத்தம் 12 நாட்களுக்கு நடக்கும் இத்திருவிழாவில் தினந்தோறும் சாமி உற்சவம் உள்ளிட்ட முக்கிய பூஜைகள் நடைபெறுகின்றன.

tiruchendur temple,masith festival ,திருச்செந்தூர் கோவில் ,மாசித் திருவிழா

இதையடுத்து இதன் தொடர்ச்சியாக 4-ம் தேதி அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று பகல் 11.30 மணிக்கு பச்சை சாத்திபச்சைநிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுக்கிறார்.

இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் 6-ம் தேதி அன்று நடக்கிறது.இதனை அடுத்து அன்று காலை 7 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 7-ம் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது.

Tags :