Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று கோலாகலமாக தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று கோலாகலமாக தொடக்கம்

By: vaithegi Sun, 15 Oct 2023 10:21:08 AM

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று கோலாகலமாக தொடக்கம்


திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மாதம் வருடாந் திர பிரம்மோற்சவம் கடந்த 18-ம் தேதிமுதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில், இன்று முதல், வருகிற 23-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழாநடைபெறவுள்ளது.எனவே இதனையொட்டி திருப்பதி நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.

மேலும், அலிபிரி நுழைவு வாயில், சோதனைச் சாவடி, திருமலையில் ஏழுமலையான் முகப்பு கோபுரம் உட்பட முக்கிய இடங்கள் அனைத்தும் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

brahmotsava festival,thirupati esumalayan temple ,பிரம்மோற்சவ விழா ,திருப்பதி ஏழுமலையான் கோயில்


நவராத்திரி பிரம்மோற்சவ விழாவினையொட்டி, நேற்று மாலை கோயிலில் ஆகம விதி களின்படி அங்குரார்ப்பணம் நடந்தது. ஏழுமலையானின் சேனாதிபதியாக கருதப்படும் விஸ்வகேசவர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதனை அடுத்து இன்று மாலை பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார்.நவராத்திரி பிரம்மோற்சவத் திற்கு 3,054 போலீஸாருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக திருப்பதி எஸ்.பி.பரமேஸ்வர் ரெட்டி நேற்று தெரிவித்துள்ளார்.

Tags :