Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருமலையில் புதிய தோற்றத்துடன் கூடிய அதிநவீன எஸ்.வி. அருங்காட்சியகம்

திருமலையில் புதிய தோற்றத்துடன் கூடிய அதிநவீன எஸ்.வி. அருங்காட்சியகம்

By: Nagaraj Sat, 04 Feb 2023 6:49:54 PM

திருமலையில் புதிய தோற்றத்துடன் கூடிய அதிநவீன எஸ்.வி. அருங்காட்சியகம்

திருமலை: திருமலையில் ரூ.120 கோடியில் புதிய தோற்றத்துடன் கூடிய அதிநவீன எஸ்வி அருங்காட்சியகம் இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் கட்டி முடிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருமலையில் நடந்த டயல் யுவர் இஓ நிகழ்ச்சிக்கு பிறகு முதன்மை செயல் அலுவலர் ஏ.வி.தர்மரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருமலையில் ரூ.120 கோடியில் புதிய தோற்றத்துடன் கூடிய அதிநவீன எஸ்வி அருங்காட்சியகம் இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் கட்டி முடிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.

இது உலகின் நம்பர் ஒன் அருங்காட்சியகமாக இருக்கும். வெங்கடாசலபதியின் தங்க நகைகள் அருங்காட்சியகத்தில் 3டி இமேஜிங் மூலம் பக்தர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சரியான எடை மற்றும் தரத்தில் லட்டு பிரசாதம் தயாரிக்க ரூ.50 கோடி மதிப்பிலான தானியங்கி இயந்திரத்தை ரிலையன்ஸ் பரிசாக வழங்கியுள்ளது.

இதன் மூலம் கூடுதல் ஆரோக்கியமான மற்றும் சுவையான லட்டு பிரசாதங்களை பக்தர்களுக்கு தயாரித்து வழங்கலாம். ஆகாச கங்கா தீர்த்தம் பகுதியில் ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடி செலவில் அஞ்சனாத்ரி கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். புதிய பரகாமணி கட்டடம் வரும் 5ம் தேதி செயல்பாட்டுக்கு வருகிறது.

automatic machine,principal,right weight,working, ,தங்க நகைகள், திருமலை, பக்தர்கள், பிரசாதம்

திருமலையில் உள்ள அக்கேசியா கார்டன் விரைவில் மாற்றப்பட உள்ளது. அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அக்கேசியா தோட்டத்தில் வண்ணமயமான மரங்கள், செடி, கொடிகள் நடப்படும். மேலும் சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள், செடி, கொடிகள், அரியவகை மூலிகை செடிகள் ஆகாயத்தாமரைக்கு மாற்றப்படும்.

இதனை பக்தர்கள் கண்டு மகிழலாம். கடந்த மாதம் 20 லட்சத்து 78 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 37 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் அன்னதானம் பெற்றுள்ளனர். 7 லட்சத்து 51 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

ஒரு மாதத்திற்கான உண்டியல் வருமானமாக 123.07 கோடி பெறப்பட்டது. பக்தர்களுக்கு 1 கோடியே 7 லட்சம் லட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. லட்டு விற்பனை மூலம் ரூ.7 கோடி வருமானம் கிடைத்தது. அவர் கூறியது இதுதான்.

Tags :