Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி கோவிலில் கருட சேவை ..பக்தர்களுக்கும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

திருப்பதி கோவிலில் கருட சேவை ..பக்தர்களுக்கும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

By: vaithegi Fri, 22 Sept 2023 3:11:28 PM

திருப்பதி கோவிலில் கருட சேவை ..பக்தர்களுக்கும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு


திருப்பதி :கருட சேவை ஏற்பாடுகள் ... திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 22ஆம் தேதியான இன்று கருட சேவை நடந்து கொண்டு வருகிறது. மிகவும் பிரபலமான இந்நிகழ்விற்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வருவது வழக்கமான ஒன்று . இதையடுத்து இந்த விழாவை முன்னிட்டு இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பக்தர்களின் கூட்டத்தை சமாளிப்பதற்காக தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளது. மேலும் இருசக்கர வாகன போக்குவரத்திற்கு நேற்று மாலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.

restrictions,returns,garuda service ,கட்டுப்பாடுகள் ,திருப்பதி , கருட சேவை


மேலும் பக்தர்களின் நலன் கருதி திருமலை அடிவாரத்திலிருந்து ஆர் டி சி பேருந்துகளை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர், உணவு, மோர், கழிவறை, ஓய்வறை மற்றும் மருத்துவ உதவிகள் போன்ற பல்வேறு முக்கிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

எனவே கருட சேவை தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் அனைவரும் காவல் துறையின் அறிவுறுத்தல்களை கேட்டு அறிந்து ஒத்துழைப்பு தருமாறு தேவஸ்தான நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

Tags :