திருப்பதி கோயிலில் நவம்பர் மாத சிறப்பு உற்சவம் குறித்து அறிவிப்பு
By: Nagaraj Mon, 30 Oct 2023 4:48:22 PM
திருப்பதி: திருப்பதியில் நவம்பர் மாதம் சிறப்பு உற்சவ நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதியில் வரும் நவம்பர் மாதம் சிறப்பு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதில் வரும் நவ., 9-ல் மாதாந்திர ஏகாதசி, நவ., 11-ல் மாதாந்திர சிவராத்திரி, 12-ல் தீபாவளி ஆஸ்தானம், 13-ல் வரலட்சுமி விரதம், 14-ல் திருமலை நம்பி சாற்றுமுறை, 16-ல் மணவாள மாமுனி சாற்றுமுறை, 17-ல் நாகர் சதுர்த்தி, 17-ல் மலையப்ப சுவாமி வீதி உலா நடக்கிறது.
தொடர்ந்து தாயாருக்கு பெரிய சேஷ வாகனம் நடைபெறும். 18-ம் தேதி வருடாந்திர புஷ்ப யாகம், 19-ம் தேதி ஏழுமலையான் கோவில் புஷ்பயாகம், 26-ல் கார்த்திகை மாத பௌர்ணமி, 27-ல் திருமங்கை ஆழ்வார் சதுர்த்தி, 28-ம் தேதி திருப்பனாழ்வார் ஆண்டு திருநட்சத்திர சிறப்பு பூஜை நடைபெறும். இவ்வாறு தேவஸ்தானம் அறிவித்துள்ளது.