Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • அலிபிரியில் பாதயாத்திரையாக இலவச தரிசன டிக்கெட் வழங்க அலுவலகம் அமைப்பு

அலிபிரியில் பாதயாத்திரையாக இலவச தரிசன டிக்கெட் வழங்க அலுவலகம் அமைப்பு

By: Nagaraj Fri, 14 Apr 2023 7:45:25 PM

அலிபிரியில் பாதயாத்திரையாக இலவச தரிசன டிக்கெட் வழங்க அலுவலகம் அமைப்பு

திருப்பதி: அலிபிரியில் பாதயாத்திரையாக இலவச தரிசன டிக்கெட் வழங்க தேவஸ்தான அதிகாரிகள் அலுவலகம் அமைத்து இன்று காலை முதல் பக்தர்களுக்கு டிக்கெட் வழங்கி வருகின்றனர்.

திருப்பதிக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சிரமமின்றி ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட், நேர ஒதுக்கீட்டுடன் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதேபோல், நடைபாதையில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இலவச நேரம் ஒதுக்கவும், டிக்கெட் வழங்கவும் தேவஸ்தானத்துக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, 2,083வது படியில் உள்ள காளி கோபுரம் அருகே தேவஸ்தான அதிகாரிகள் அலுவலகம் அமைத்து தரிசன டிக்கெட் வழங்கினர்.

swamy,tirumala,tirupathi, ,இடம் மாற்றம், தகவல், தேவஸ்தானம், தகவல், காணிக்கை

தினமும் அதிகாரிகள் அலைந்து திரிந்து டிக்கெட் வழங்குவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அலிபிரியில் பாதயாத்திரையாக இலவச தரிசன டிக்கெட் வழங்க தேவஸ்தான அதிகாரிகள் அலுவலகம் அமைத்து இன்று காலை முதல் பக்தர்களுக்கு டிக்கெட் வழங்கி வருகின்றனர்.

இலவச தரிசன டிக்கெட் பெறும் பக்தர்கள் 1,240 படி அருகில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் தரிசன டிக்கெட்டை ஸ்கேன் செய்து நேர ஒதுக்கீடு பெற்று தரிசனத்திற்கு செல்ல வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பக்தர்கள் இந்த வசதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை மனதில் வைத்து அதற்கேற்ப திருமலை யாத்திரையை திட்டமிட வேண்டும். திருப்பதிக்கு நேற்று 67,687 பேர் வருகை தந்துள்ளனர். 25,090 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

Tags :
|