Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • நாடெங்கும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது

நாடெங்கும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது

By: Nagaraj Tue, 29 Aug 2023 6:46:40 PM

நாடெங்கும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது

கேரளா: ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்... நாடெங்கும் மலையாள மொழி பேசுவோர், ஓணம் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆன்மிக வரலாற்றின் அடிப்படையில், மன்னன் மஹாபலியை வரவேற்கும் விதமாக, ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில், மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர். ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி பத்துநாள் கொண்டாட்டத்தின் நிறைவாக திருவோண நாளான இன்று, வீட்டு வாயில்களில் இன்று வண்ணப் பூக்களால் அத்தப்பூ கோலங்களிட்டு, புத்தாடை உடுத்தி குடும்பத்தினருடன் கூடி 'சத்யா' (sadhya) எனப்படும் அறுசுவை உண்டு மகிழ்கின்றனர்.

equality,onam festival,celebration,malayalam,unity ,சமத்துவம், ஓணம் பண்டிகை, கொண்டாட்டம், மலையாளம், ஒற்றுமை

ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் பல்வேறு இடங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் விளையாட்டுகளும் களைகட்டும். தமிழகத்தில் சென்னை, கோவை, உதகை, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மலையாளமொழி பேசும் மக்கள் இன்று ஓணத்தை கொண்டாடி மகிழ்கின்றனர். சாதிமத பேதமின்றி, அனைத்து தரப்பு மக்களாலும் சமத்துவத்துடன் ஒற்றுமையாக கொண்டாடப்படும் இத்திருநாள் மலையாள மக்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும் திருநாள்தான்

Tags :