Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • சபரிமலையில் ஒரே நாளில் ஒரு லட்சம் பக்தர்கள் குவிந்தனர்... தரிசன நேரத்தை அதிகரிக்க வலியுறுத்தல்

சபரிமலையில் ஒரே நாளில் ஒரு லட்சம் பக்தர்கள் குவிந்தனர்... தரிசன நேரத்தை அதிகரிக்க வலியுறுத்தல்

By: Nagaraj Sat, 10 Dec 2022 3:14:41 PM

சபரிமலையில் ஒரே நாளில் ஒரு லட்சம் பக்தர்கள் குவிந்தனர்... தரிசன நேரத்தை அதிகரிக்க வலியுறுத்தல்

திருவனந்தபுரம்: ஒரே நாளில் ஒரு லட்சம் பக்தர்கள்... சபரிமலையில் ஒரே நாளில் ஒரு லட்சம் பக்தர்கள் குவிந்தனர். அய்யப்பனை சிரமமின்றி தரிசிக்க கூடுதல் நேரம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சபரிமலை, மண்டல மகர விளக்கு பூஜை நெருங்கி வரும் நிலையில், அய்யப்பனை தரிசனம் செய்ய சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பதிவு முறை மற்றும் உடனடி பதிவு முறை மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால், பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 9 ஆயிரம் பக்தர்கள் குவிந்தனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

crowd,darshan time,sabarimala,should increase ,கூட்டம், சபரிமலை, பக்தர்கள், தரிசன நேரம், அதிகரிக்க வேண்டும்

பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், 12 மணி நேரம் காத்திருந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர். கடந்த 16ம் தேதி முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். முதன்முறையாக ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை நடை திறக்கப்பட்ட நாள் முதல் நேற்று வரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சன்னிதானத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சபரிமலை நடை முதலில் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு மூடப்பட்டது.

பின்னர் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்பட்டது. கூட்டம் அதிகரித்ததால் தரிசன நேரம் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. அதாவது ஒரு நாளில் 18 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். எனவே, தரிசன நேரத்தை அதிகரிக்கவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
|