Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • டிசம்பர் மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெள்ளிக்கிழமை வெளியீடு

டிசம்பர் மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெள்ளிக்கிழமை வெளியீடு

By: vaithegi Thu, 10 Nov 2022 5:26:08 PM

டிசம்பர் மாதத்திற்கான  ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெள்ளிக்கிழமை வெளியீடு

திருப்பதி: ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு ... திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு வரும் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் மாதம் தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது. எனவே அதன்படி நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது.

தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிசம்பர் மாதத்திற்கான 7.75 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது. இதேபோல் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்டம் உயர்ந்து உள்ளதால் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து அவதி அடைந்து வந்தனர். இதனால் இலவச தரிசனத்திலும் டைம் ஸ்லாட் முறையை அமல்படுத்த வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்து இருந்தனர்.

ஆன்லைன் தரிசன டிக்கெட்,திருப்பதி ,ஆன்லைன் தரிசன டிக்கெட்,திருப்பதி

இதனையடுத்து பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற தேவஸ்தான அதிகாரிகள் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தினமும் 25 ஆயிரம் பேரும் மற்ற நாட்களில் 15 ஆயிரம் பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில் அலிப்பிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் கெஸ்ட் ஹவுஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன நேர ஒதுக்கிட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பக்தர்கள் சிரமமின்றி குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்து கொண்டு வருகின்றனர்.

Tags :