Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • வரும் ஜன.2ம் தேதி பரமபத வாசல் திறப்பு... திருப்பதியில்தாங்க!!!

வரும் ஜன.2ம் தேதி பரமபத வாசல் திறப்பு... திருப்பதியில்தாங்க!!!

By: Nagaraj Fri, 23 Dec 2022 11:10:29 PM

வரும் ஜன.2ம் தேதி பரமபத வாசல் திறப்பு... திருப்பதியில்தாங்க!!!

திருப்பதி: பரமபதவாசல் திறப்பு... திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 2ம் தேதி பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது. ஏழுமலையான் கோவிலில், ஆழ்வார் திருமஞ்சனம், சங்கராந்தி, தீபாவளி ஆஸ்தானம், பிரம்மோத்ஸவ விழா மற்றும் முக்கிய திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 27ம் தேதி கோவிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை மூலவருக்கு பட்டு வஸ்திரம் சாத்தப்படுகிறது.கருவறை, ஆனந்த சாந்திமா, கொடி மரம், யோக நரசிம்ம சாமி, வகுளமாதா, பாஷ்யகரால சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாத மண்டபம், மகாதுாரம் ஆகியவை சுத்தம் செய்யப்படும்.

the opening,gates of heaven,tirupati, ,சொர்க்கவாசல், திருப்பதி, திறப்பு


பின்னர் பச்சை கற்பூரம், மஞ்சள், கிச்சலிக்கட்டா உள்ளிட்ட பல்வேறு மூலிகை பொருட்களால் தயாரிக்கப்பட்ட கலவை கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது.

கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிப்பது நிறுத்தப்பட உள்ளது. அன்று காலை 11 மணிக்கு மேல் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது. திருப்பதிக்கு நேற்று 63,145 பேர் வருகை தந்துள்ளனர். 22,411 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.39 கோடி உண்டியல்கள் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Tags :