Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை வருகிற செப்டம்பர் 6ம் தேதி அன்று மாலை 5 மணிக்கு திறப்பு

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை வருகிற செப்டம்பர் 6ம் தேதி அன்று மாலை 5 மணிக்கு திறப்பு

By: vaithegi Sun, 04 Sept 2022 4:40:49 PM

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை வருகிற செப்டம்பர் 6ம் தேதி அன்று மாலை 5 மணிக்கு திறப்பு

கேரளா: கேரளாவில் கொண்டாடப்பட உள்ள ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை வருகிற 6ம் தேதி மாலை முதல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். எனவே இதனை தொடர்ந்து 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை கோவிலின் நடை திறக்கப்படும்.

இதை அடுத்து கோவிலின் நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், களபாபிஷேகம், கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் ஓணம் பண்டிகைக்கான சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

kerala,onam festival,sabarimala ayyappan ,கேரளா, ஓணம் பண்டிகை, சபரிமலை அய்யப்பன்

மேலும் அத்துடன் 8ம் தேதி அன்று திருவோண தினத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகளுக்கு பிறகு கோவிலின் நடை செப்டம்பர் 10ம் தேதி அன்று இரவு 10 மணிக்கு அடைக்கப்படும் என்று தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து புரட்டாசி மாத பூஜைக்காக கோவிலின் நடை மீண்டும் வருகிற செப்டம்பர் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை திறக்கப்படும். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags :
|