Advertisement

திருவண்ணாமலை கோயிலில் கட்டண தரிசனம் ரத்து

By: Nagaraj Mon, 03 July 2023 4:12:05 PM

திருவண்ணாமலை கோயிலில் கட்டண தரிசனம் ரத்து

திருவண்ணாமலை: கட்டண தரிசனம் ரத்து... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பௌர்ணமியில் சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மேலும் பௌர்ணமி நாளில் பொதுதரிசனத்தில் பக்தர்கள் விரைவாக தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது.

tiruvannamalai,paid darshan,cancellation,devotees,krivalam ,திருவண்ணாமலை, கட்டண தரிசனம், ரத்து, பக்தர்கள், கிரிவலம்

இங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் மாதம்தோறும் பௌா்ணமி நாள்களில் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.

இந்த நிலையில், ஆனி மாதப் பெளா்ணமி நேற்று 2ம் தேதி இரவு 7.45 மணிக்குத் தொடங்கி திங்கள்கிழமை (ஜூலை 3) மாலை 5.48 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :