Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • கொள்ளைக் கொள்ளும் சின்ன கண்ணனின் அழகை உயர்த்தும் மயில் இறகு!!!

கொள்ளைக் கொள்ளும் சின்ன கண்ணனின் அழகை உயர்த்தும் மயில் இறகு!!!

By: Nagaraj Fri, 07 Aug 2020 10:42:02 PM

கொள்ளைக் கொள்ளும் சின்ன கண்ணனின் அழகை உயர்த்தும் மயில் இறகு!!!

சின்னக்கண்ணனே அழகோ... அழகுதான். இந்த அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பது கண்ணனின் தலையில் சூடியிருக்கும் மயில் இறகு.

பட்டு பீதாம்பரங்களாலும், எண்ணற்ற ஆபரணங்களாலும் கிருஷ்ண பகவான் அலங்கரிக்கப்பட்டாலும், அதற்கெல்லாம் மணிமகுடமாக விளங்குவது, இந்த மயிலிறகு தான். கிருஷ்ணனின் தலையை அலங்கரிக்கும் பாக்கியம் மயில் இறகிற்கு தான் வாய்த்தது.

krishna,peacock feather,unmoved place,beauty to beauty ,கிருஷ்ணன், மயில் இறகு, நீங்காத இடம், அழகிற்கு அழகு

சின்னக் கண்ணனின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது அவன் தலையில் சூடியிருக்கும் மயில் இறகு. பட்டு பீதாம்பரங்களாலும், எண்ணற்ற ஆபரணங்களாலும் கிருஷ்ண பகவான் அலங்கரிக்கப்பட்டாலும், அதற்கெல்லாம் மணிமகுடமாக விளங்குவது,இந்த மயிலிறகு தான். கிருஷ்ணனின் தலையை அலங்கரிக்கும் பாக்கியம் மயிலிறகிற்கு தான் வாய்த்தது.

மயில் இறகு எப்படி கிருஷ்ணனின் தலையில் வந்தது?. அதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதை உண்டு. பட்டு பீதாம்பரம் தரித்து ஏகபோக செல்வாக்குடன் தரணியை ஆள வேண்டிய கிருஷ்ணன், ஆயர்பாடி சிறுவர்களுடன் மண்ணில் புரண்டு விளையாடுவான்.

krishna,peacock feather,unmoved place,beauty to beauty ,கிருஷ்ணன், மயில் இறகு, நீங்காத இடம், அழகிற்கு அழகு

பூவின் வாசத்தை மறைக்க முடியாதது போல, குட்டிக் கிருஷ்ணன் முகத்தில் ஒளி வீசிய தெய்வீக அழகு, அனைவரையும் கொள்ளைக் கொண்டது. கோகுலவாசிகளின் செல்லப் பிள்ளையான அவன்,அம்மாக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் ஒரு மதியுக மன்னனாகவே விளங்கினான். கண்ணனின் மேல் காதலும் பற்றும் கொண்ட ஆயர்பாடி சிறுவர்கள், தங்கள் மனதுக்கு நெருக்கமான கண்ணனை கௌரவிக்க விரும்பி, அங்கே சுற்றித்திரிந்த மயிலை பிடித்து, அதனிடம் இருந்து ஓர் இறகை எடுத்து கிருஷ்ணனின் தலையில் கிரீடம் போல் செருகினார்கள்.

அன்று முதல் கிருஷ்ணனின் தலைமுடியில் மயிலிறகு நீங்காத இடம் பிடித்தது. இன்னும் சொல்லப் போனால், மயில் இறகு கிருஷ்ணனின் அடையாளமாகவே மாறிவிட்டது என்றே கூறலாம்.

Tags :