Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • மக்கள் 20 முதல் 24 மணி நேரம் வரைக்கும் கூட காத்திருந்து திருப்பதி ஏழுமலையான் தரிசித்து வருகின்றனர்

மக்கள் 20 முதல் 24 மணி நேரம் வரைக்கும் கூட காத்திருந்து திருப்பதி ஏழுமலையான் தரிசித்து வருகின்றனர்

By: vaithegi Sat, 11 June 2022 10:56:35 PM

மக்கள் 20 முதல் 24 மணி நேரம் வரைக்கும் கூட காத்திருந்து திருப்பதி ஏழுமலையான் தரிசித்து வருகின்றனர்

இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் பக்தர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.

தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் மறுபடியும், அனைத்து சேவைகளும் துவங்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தற்போது கோடை விடுமுறை என்பதால் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதுவும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை போன்ற வார இறுதி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.

நேற்று ஒரே நாளில் மட்டுமே 68 ஆயிரம் வரைக்கும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை புரிந்துள்ளனர். மேலும், ஒரே நாளில் 3 கோடி 70 லட்சம் வரைக்கும் உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கோடை விடுமுறை முடிந்தவுடன் பழையபடி இலவச டோக்கன் சேவைகள் தொடங்கப்படும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags :