Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • கோவை மாநகரில் விநாயகர் சிலைகள் கரைக்க ஏற்பாடுகள் மும்முரம்

கோவை மாநகரில் விநாயகர் சிலைகள் கரைக்க ஏற்பாடுகள் மும்முரம்

By: Nagaraj Wed, 20 Sept 2023 4:39:06 PM

கோவை மாநகரில் விநாயகர் சிலைகள் கரைக்க ஏற்பாடுகள் மும்முரம்

கோவை: கோவை மாநகரில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது.ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்புடன் தீவிர கண்காணிப்பு வைக்கப்பட்டு இருந்தது.

விநாயகர் சிலை கரைப்பதற்காக குறிச்சி,சிங்காநல்லூர் குளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோவை மாநகரில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிலைகளை வாகனங்களில் ஏற்றி வந்தவர்கள் சிலையை இறக்கி போலீசாரிடம் ஒப்படை வேண்டும் போலீசார் அந்த சிலைகளை குளத்தில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.குளத்திற்குள் போலீசாரை தவிர வேறு யாரையும் இறங்க அனுமதி இல்லை.

police,palakkad,ganesha statue,coimbatore,security works ,காவல்துறை, பாலக்காடு, விநாயகர் சிலை, கோவை, பாதுகாப்பு பணிகள்

மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குளங்களில் தீயணைப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பெரிய சிலைகளை ஒரு இடத்திலும்,சிறிய சிலைகள் ஒரு இடத்திலும் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குளத்திற்குள் பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.இரவிலும் சிலைகள் கரைக்கப்பட்ட உள்ளதால் மின்சார விளக்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்டிருந்த சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் சென்று சிலைகளை கரைக்க உள்ளனர். மேலும் குறிச்சி,ஆர்.எஸ் புரம், குனியமுத்தூர் போன்ற பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் ஈச்சனாரி வந்து செட்டிபாளையம், போத்தனூர் வழியாக உக்கடம் சென்றடையும்.

மேலும் பாலக்காட்டில் இருந்து வரும் வாகனங்கள் கோவைப்புதூர்,பேரூர், புட்டு விக்கி பாலம் வழியாக உக்கடம் வந்தடைய போக்குவரத்து காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags :
|