ஒரேநாளில் 10 டன் மலர்களால் ஏழுமலையான் – பத்மாவதி தாயாருக்கு புஷ்ப யாகம்
By: Nagaraj Tue, 21 Nov 2023 11:00:41 AM
திருப்பதி: திருப்பதியில் புஷ்ப யாகம்... திருப்பதியில் ஏழுமலையானுக்கும், பத்மாவதி தாயாருக்கும் ஒரேநாளில் 10 டன் மலர்கள் மூலம் இரு கோவில்களிலும் புஷ்பயாகம் நடந்தது.
திருப்பதியில் ஏழுமலையானுக்கும் திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கும் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஒரே நாளில் பத்து டன் எடையுள்ள பல்வேறு வகையான மலர்களை கொண்டு புஷ்பயாகம் நடைபெற்றது.
உற்சவர்களின் மார்பளவு வரை மூன்று முறை மலர்களை நிரப்பி அர்ச்சகர்கள் புஷ்ப யாகம் நடத்தினர். பத்மாவதி தாயாருக்கும் 3 டன் எடையுடைய பல்வேறு மலர்களை பயன்படுத்தி புஷ்ப யாகம் நடைபெற்றது.
முன்னதாக இரண்டு கோவில்களிலும் உற்சவர்களுக்கு சந்தனம், பன்னீர், பால், தயிர், இளநீர், ஜவ்வாது,புனுகு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வகையான சுகந்த திரவியங்களை பயன்படுத்தி அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது.