Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருநாகேஸ்வரம் கோயிலில் ராகுகேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

திருநாகேஸ்வரம் கோயிலில் ராகுகேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

By: Nagaraj Tue, 01 Sept 2020 6:14:54 PM

திருநாகேஸ்வரம் கோயிலில் ராகுகேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

பக்தர்கள் தரிசனம்... ராகுகேது பெயர்ச்சியையொட்டி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் கோயிலில் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ராகு பகவான் இன்று நண்பகல் 2.16 மணிக்கு ரிஷப ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியின் கேட்டை நட்சத்திரம் 4-ம் பாதத்திற்கும் பெயர்ச்சியாகினர்.

balabhishekam,yogurt abhishekam,rahu,ketu,swami ,பாலாபிஷேகம், தயிர் அபிஷேகம், ராகு, கேது, சுவாமி

இதையொட்டி திருநாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி கோயிலில் ராகு பகவானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ராஜ அலங்காரத்தில் தங்க கவசத்தில் சுவாமி காட்சியளித்தார்.

தென்காளகஸ்தி என அழைக்கப்படும் திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் பாம்புர நாதர் கோயிலில் சிறப்பு பூஜைகளும், தீபாரதனையும் நடைபெற்றன. புதுச்சேரி மொரட்டாண்டி பகுதியில் உள்ள 12 அடி உயர ராகு கேது சிலைக்கு தலா 108 லிட்டர் பாலாபிஷேகம், தயிர் அபிஷேகம் நடைபெற்றது.

Tags :
|
|