Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இன்று முதல் ஒரு மாதம் சேவை நிறுத்தம்

பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இன்று முதல் ஒரு மாதம் சேவை நிறுத்தம்

By: vaithegi Sun, 20 Aug 2023 10:33:39 AM

பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இன்று முதல் ஒரு மாதம் சேவை நிறுத்தம்


பழனி : முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினசரி வருகை புரிந்து, சாமி தரிசனம் செய்வது வழக்கமான ஒன்று. தரிசனத்திற்காக முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலை கோயிலுக்கு செல்ல படிப்பாதை யானை ,பாதை பிரதான வழியாகவுள்ளது.

மேலும் அத்துடன் மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவைகளும் இயக்கப்பட்டு கொண்டு வருகிறது .இதையடுத்து விரைவாகவும், இயற்கை அழகை ரசித்த படியும் ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயிலில் செல்லலாம்.காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் ரோப் கார் தினமும் பிற்பகலில் 1 மணி நேரமும் மாதத்தில் ஒரு நாளும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது.

palani murugan temple,robkar ,ரோப்கார் ,பழனி முருகன் கோயில்

ரோப்கார் சேவை ஒரு சில நிமிடங்களில் மலை கோயிலின் உச்சிக்கு பக்தர்களை அழைத்துச் செல்வதால் பக்தர்கள் மத்தியில் ரோப் கார் சேவை பெரும் வரவேற்பு பெற்றுள்ளது எனலாம்.

இந்த நிலையில் பழனி முருகன் கோயில் ரோப் கார் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் 1 மாதத்திற்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே இதன் காரணமாக பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை மற்றும் மின் இழுவை ரயில் ஆகியவற்றை பயன்படுத்தி மலைக் கோவிலுக்கு சென்று வரலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :