Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி திறப்பு

By: vaithegi Fri, 09 Sept 2022 12:54:34 PM

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு சீசளை தவிர ஒவ்வொரு மாதமும் மலையாள மாதத்திற்கு இணையான தமிழ் மாத பிறப்பையொட்டி முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

இதை அடுத்து இந்த நிலையில், புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி அவர்கள் திறந்து வைக்கிறார்.

sabarimala,puratasi month puja ,சபரிமலை ,புரட்டாசி மாத பூஜை

21-ந் தேதி வரை பூஜைகள் 5 நாட்கள் நடைபெறும்.இதனைத்தொடர்ந்து இந்நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகம் போன்றவை நடைபெறும்.

மேலும் அதனை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். மேலும் தினசரி நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :