Advertisement

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு

By: vaithegi Thu, 15 Sept 2022 4:11:39 PM

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு சீசளை தவிர ஒவ்வொரு மாதமும் மலையாள மாதத்திற்கு இணையான தமிழ் மாத பிறப்பையொட்டி முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

இதனை அடுத்து இந்நிலையில், மலையாள மாதமான கன்னிமாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி அவர்கள் திறந்து வைக்கிறார்.

sabarimala ayyappan temple , சபரிமலை அய்யப்பன் கோவில்

இதனைத்தொடர்ந்து நாளை முதல் 21-ந் தேதி வரை பூஜைகள் 5 நாட்கள் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று கொண்டு வருகிறது.

மேலும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் தரப்பில் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags :