Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • சபரிமலை ... இதை யாரும் நம்ப வேண்டாம் .. திருவிதாங்கூர் தேவஸ்தானம் விளக்கம்

சபரிமலை ... இதை யாரும் நம்ப வேண்டாம் .. திருவிதாங்கூர் தேவஸ்தானம் விளக்கம்

By: vaithegi Mon, 19 Dec 2022 09:44:43 AM

சபரிமலை    ...  இதை யாரும் நம்ப வேண்டாம்  ..   திருவிதாங்கூர் தேவஸ்தானம் விளக்கம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன், உடனடி முன்பதிவு நடைமுறை தொடரும் ... சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று கொண்டு வருகிறது. எனவே இதையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்து கொண்டு வருகிறார்கள்.

பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது. சபரிமலையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்ததை தொடர்ந்து நெரிசலை தவிர்க்க தினசரி 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதன் இடையே சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாக வதந்தி ஒன்று பரவியது.

sabarimala,devasthanam ,சபரிமலை    ,தேவஸ்தானம்

இதனை அடுத்து இது பற்றி திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் அவர்கள் கூறும்போது, 'சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தினசரி 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 90 ஆயிரத்திற்கு மேல் முன்பதிவு செய்ய முயலும் பக்தர்களின் பதிவு ஏற்கப்படாது.

இதனால் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. இதை யாரும் நம்ப வேண்டாம். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு வழக்கம் போல் தொடரும்' என்றனர்.

Tags :