Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • தொடர் விடுமுறை .. முதியோர், மாற்றுத்திறனாளிகள் ,கைக்குழந்தையுடன் வருகை புரிவரிவோர் திருப்பதி வருவதை தள்ளி வைக்க வேண்டும்

தொடர் விடுமுறை .. முதியோர், மாற்றுத்திறனாளிகள் ,கைக்குழந்தையுடன் வருகை புரிவரிவோர் திருப்பதி வருவதை தள்ளி வைக்க வேண்டும்

By: vaithegi Fri, 12 Aug 2022 3:25:34 PM

தொடர் விடுமுறை ..  முதியோர், மாற்றுத்திறனாளிகள் ,கைக்குழந்தையுடன் வருகை புரிவரிவோர்  திருப்பதி வருவதை தள்ளி வைக்க வேண்டும்

திருப்பதி : ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலையில் இருக்கும் சுவாமி ஏழுமலையானை தரிசிக்க வெளிநாடுகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள்.

இதையடுத்து தற்போது கடந்த 11ம் தேதி ஸ்ராவன பவுர்ணமி, 12ம் தேதி ஹயக்ரீவர் ஜெயந்தி, 13, 14ம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை,15ம் தேதி சுதந்திர தினம் என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

consecutive leave,thirupati ,தொடர் விடுமுறை,திருப்பதி

அதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட மிக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தேவஸ்தானம் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதை அடுத்து இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்பதால் தேவஸ்தானத்திற்கு முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வருகை புரிவரிவோர் உள்ளிட்டவர்கள் திருப்பதிக்கு வருவதை தள்ளி வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வருகிற 19ம் தேதி கோகுலாஷ்டமி, 20,21 ஆகிய தேதிகளில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இந்த சமயத்திலும் பக்தர்களின் கூட்டம் மிக அதிகரிக்கக்கூடும். அதனால் இந்த 3 நாட்களில் முன்பதிவு செய்தவர்களை தவிர மற்றவர்கள் கோவிலுக்கு வருகை புரிவதை தவிர்க்க வேண்டும் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது.

Tags :