Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடு ..தேவஸ்தானம் திட்டமிடல்

திருப்பதி பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடு ..தேவஸ்தானம் திட்டமிடல்

By: vaithegi Tue, 10 Oct 2023 3:04:16 PM

திருப்பதி பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடு ..தேவஸ்தானம் திட்டமிடல்


திருப்பதி : பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக 7கிமீ தூரத்திற்கு பல்வேறு வசதிகளுடன் கூடிய நிரந்தர வரிசை அமைக்க திட்டமிடல் ...

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தபடியே இருந்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கொண்டு வருகின்றனர். மேலும், இலவச தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 10 மணி நேரம் வரைக்கும் கூட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

devasthanam,tirupati,special arrangement ,தேவஸ்தானம் ,திருப்பதி ,சிறப்பு ஏற்பாடு

இந்த நிலையில், பக்தர்களின் நலன் கருதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதாவது, பல மணி நேரம் ஒரே வரிசையில் பக்தர்கள் காத்திருக்க வேண்டியுள்ளதால் திருப்பதி மலையில் 7கிலோமீட்டர் தொலைவுக்கு நிரந்தர வரிசை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அதற்காக ரூ.18 கோடி செலவில் பக்தர்களின் வசதிக்காக 7 கிலோமீட்டர் தொலைவுக்கு உணவுக்கூடம் மற்றும் கழிப்பறை வசதி அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பக்தர்களின் சிரமத்தை போக்க கூடிய விரைவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Tags :