Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • நாளை முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாளை முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By: vaithegi Wed, 15 Nov 2023 11:11:56 AM

நாளை முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சபரிமலை : போக்குவரத்துத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கேரள மாநிலத்தில்‌ மிகவும்‌ பிரசித்திபெற்ற சபரிமலையில்‌ உள்ள அய்யப்பன்‌ ஆலயத்திற்கு ஒவ்வொரு ஆண்டும்‌ நடைபெறும்‌ மண்டல பூஜை மற்றும்‌ மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின்‌ போது, தமிழகத்தில் இருந்து அய்யப்ப பக்தர்கள்‌ சென்று வர ஏதுவாக, தமிழகத்தின்‌ முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப்‌ போக்குவரத்துக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ ஆண்டுதோறும்‌ சிறப்புப்‌ பேருந்துகள்‌ இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்‌, இந்தாண்டும்‌ 16.11.2023 முதல்‌ 16.01.2024 வரையில்‌, சென்னை, திருச்சி, மதுரை மற்றும்‌ புதுச்சேரி / கடலூர்‌ ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப்‌ பேருந்துகள்‌ மற்றும்‌ குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும்‌ படுக்கை வசதி உள்ள சிறப்புப்‌ பேருந்துகளாக இயக்கப்பட உள்ளன. (சபரிமலை தேவஸ்தானம்‌ அறிவிப்பின்படி 27.12.2023 முதல்‌ 30.12.2023 மாலை 5.00 மணி வரை கோவில்‌ நடை சாத்தப்படுவதால்‌ 26.12.2023 முதல்‌ 29.12.2023 வரை இச்சிறப்புப்‌ பேருந்து இயக்கப்படமாட்டாது) இந்த வருடம்‌ பக்தர்கள்‌ கூடுதலாக பயணம்‌ செய்ய முன்வருவார்கள்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.

special buses,sabarimala ,சிறப்பு பேருந்துகள் ,சபரிமலை

எனவே அவற்றினை கருத்தில்‌ கொண்டு சென்னை மற்றும்‌ இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள்‌ இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில்‌ பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும்‌ குழுவாக செல்லும்‌ பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில்‌ பேருந்து வசதி செய்து தரப்படும்‌.

மேலும்‌, 30 நாட்களுக்கு முன்னதாக இந்த சிறப்புப்‌ பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, WWW.TNSTC.IN மற்றும் TNSTC Official App ஆகிய இணையத்தளங்களில்‌ முன்பதிவு செய்துகொள்ளும்‌ வசதியும்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளது.பேருந்துகளின்‌ விவரம்‌ உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014452, 9445014424, 9445014463 மற்றும்‌ 9445014416 ஆகிய கைப்பேசி எண்களைத்‌ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்‌” என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :