Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் திருவாரூர் கோவிலின் சிறப்புகள்

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் திருவாரூர் கோவிலின் சிறப்புகள்

By: Nagaraj Tue, 12 July 2022 09:18:53 AM

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் திருவாரூர் கோவிலின் சிறப்புகள்

திருவாரூர்: திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.


இந்தியாவின் மிகப்பெரிய கோவில் என்ற பெருமை 33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கே உரியது. ஒன்பது ராஜ கோபுரங்கள், எண்பது விமானங்கள், பன்னிரண்டு பெரிய மதில்கள், பதிமூன்று மிகப்பெரிய மண்டபங்கள், பதினைந்து தீர்த்தக்கிணறுகள், மூன்று நந்தவனங்கள், மூன்று பெரிய பிரகாரங்கள், முன்னூற்று அறுபத்து ஐந்து லிங்கங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட சன்னதிகள், எண்பத்து ஆறு விநாயகர் சிலைகள், இருபத்தி நான்குக்கும் மேற்பட்ட உள் கோவில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது.

tiruvarur,temple,special,chariot road,five prakaras,columns ,திருவாரூர், கோவில், சிறப்பு, தேர் ஓடும் வீதி, ஐந்து பிரகாரங்கள், கற்றூண்கள்

இந்த கோவில்... சோழர்கள் கட்டிய கோவில் இது. பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், தஞ்சை நாயக்கர்கள் மராத்திய மன்னர்கள் என அனைவரும் தமது ஆட்சியில் இக்கோவிலை சிறப்பாக நிர்வகித்துள்ளனர். திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.

நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிரகாரங்களும் அமைந்துள்ளது. கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கற்றூண்கள், திருவிழாக் காலங்களில் பந்தல் போடுவதற்காக முன்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்ற பழமொழி இந்த கோவிலின் சிறப்பை உணர்த்தும் (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்).

Tags :
|