Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • பூதலூர் ஸ்ரீவிஜய கோதண்டராமர் ஆலயத்தில் புரட்டாசி சிறப்பு வழிபாடுகள்

பூதலூர் ஸ்ரீவிஜய கோதண்டராமர் ஆலயத்தில் புரட்டாசி சிறப்பு வழிபாடுகள்

By: Nagaraj Fri, 02 Oct 2020 5:33:10 PM

பூதலூர் ஸ்ரீவிஜய கோதண்டராமர் ஆலயத்தில் புரட்டாசி சிறப்பு வழிபாடுகள்

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அக்ரஹாரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீவிஜய கோதண்ட ராமர் ஆலயம். இங்கு தனி சன்னதியில் ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ அபய வரத ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகின்றனர்.

மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளை நடத்துவதற்காக தெரு மக்கள் மற்றும் கலாம் நற்பணி மன்றத்தை சேர்ந்த சுதாகர், ராஜ்குமார், செந்தில்குமார், சுகன்ராஜ், சிவானந்தம், குமார், பிரவீன்குமார், அருண், வீரமணி, சந்தோஷ், விக்ரம், செந்தில், விஜய், தினா, தேவா, அஜித், ராம் பிரசாத், வினோத், கார்த்தி, ஸ்ரீதர் ஆகியோர் கோயிலை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொண்டனர். கோயில் சுற்றுப்புறம், வளாகம் சுத்தம் செய்யப்பட்டது.

purattasi worship,vijaya gothandramar,devotees,anointing ,புரட்டாசி வழிபாடு, விஜய கோதண்டராமர், பக்தர்கள், அபிஷேகம்

இதையடுத்து முதல்வாரம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் நடந்தது. இதை பாலசுப்பிரமணிய அய்யர் தலைமையில் ராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, செந்தில், ஓய்வு வி.ஏ.ஓ., ஜெயராமன், ஜெயபால், நாகராஜன், மருதமுத்து ஆகியோர் பணிகளை மேற்கொண்டனர். தேவையான வஸ்திரங்களை ராமமூர்த்தி வழங்கினார். மாலைகளை கிருஷ்ணமூர்த்தி, கலாம் நற்பணி மன்றத்தினர் உபயமாக அளித்தனர். பொங்கல், வெண்பொங்கல் பிரசாதத்தை பாரதி, உஷா பாரதி குடும்பத்தினர் மற்றும் ராமகிருஷ்ண பட்டாச்சாரியார் குடும்பத்தினர் வழங்கினர்.

தொடர்ந்து முதல்வாரம் மாலையில் சுவாமிகளுக்கு மஞ்சள், இளநீர், பால், திரவியப்பொடி உட்பட பல அபிஷேகங்கள் நடந்தன. அலங்காரம், பூஜைகளை சுப்பிரமணிய குருக்கள் செய்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதேபோல் இரண்டாம் வாரம் சனிக்கிழமை மாலை ஸ்ரீ விஜய கோதண்டராமர் உட்பட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள் நடந்தன.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாலசுப்பிரமணிய அய்யர் -சரஸ்வதி, சேதுராமன்- மீனா குடும்பத்தினர் பிரசாதங்களை உபயமாக வழங்கினர். பூஜைகளை சந்தானம் அய்யர் செய்தார். இரண்டு வாரமும் கோயிலில் ஒலி பெருக்கி கட்டப்பட்டு சுவாமி பாடல்கள் ஒலிப்பரப்பப்பட்டது. இதனை பத்மா வாய்ஸ் முத்துராமன் உபயமாக வழங்கினார்.

Tags :