Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • பரிந்துரை கடிதத்துடன் தரிசனத்திற்கு வருபவர் மீது சிறப்பு கண்காணிப்பு

பரிந்துரை கடிதத்துடன் தரிசனத்திற்கு வருபவர் மீது சிறப்பு கண்காணிப்பு

By: Nagaraj Sun, 23 Apr 2023 6:55:28 PM

பரிந்துரை கடிதத்துடன் தரிசனத்திற்கு வருபவர் மீது சிறப்பு கண்காணிப்பு

திருப்பதி: பரிந்துரை கடிதங்கள் மற்றும் அவைகளுடன் தரிசனத்திற்கு வருபவர்கள் மீது சிறப்பு கண்காணிப்பு நடத்தப்படும் என jpUg;தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பரிந்துரை கடிதம் பெற்று அதை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் கொடுத்து வி.ஐ.பி. பிரேக் தரிசனம் செய்கிறார்கள்.

வி.ஐ.பி. பிரேக் தரிசன சிபாரிசு கடிதம் தருபவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு சிபாரிசு கடிதம் கொடுப்பதாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன

darshan,special vigilance,tirupati, ,சிபாரிசு கடிதம், திருப்பதி, தேவஸ்தானம்

இந்நிலையில் வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட் எம்.எல்.சி. ஷேக் சப்ஜி என்பவர் லட்சக்கணக்கில் பணம் பெற்று விற்றது தெரியவந்தது. இது தொடர்பாக அவரது கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். ஷேக்சாப்ஜி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, மக்கள் பிரதிநிதிகள் பரிந்துரை கடிதம் கொடுப்பதில் தேவஸ்தான அதிகாரிகளும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

தீவிர கண்காணிப்பு மூலம் நேற்று 20 பரிந்துரை கடிதங்கள் நிராகரிக்கப்பட்டன. வரும் நாட்களில் பரிந்துரை கடிதங்களை முழுமையாக சரிபார்க்க திட்டமிட்டுள்ளனர். சில ஏஜென்டுகள் அதிக அளவில் பணம் வசூலித்து டிக்கெட் வழங்குவதாக எழுந்த புகாரின் பேரில் விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரிந்துரை கடிதங்கள் மற்றும் அவைளுடன் தரிசனத்திற்கு வருபவர்கள் மீது சிறப்பு கண்காணிப்பு நடத்தப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்

Tags :