Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • ஆடி அமாவாசை விழாவையொட்டி மதுரை-ராமேசுவரம் இடையே வருகிற 28-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கம்

ஆடி அமாவாசை விழாவையொட்டி மதுரை-ராமேசுவரம் இடையே வருகிற 28-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கம்

By: vaithegi Tue, 26 July 2022 09:52:16 AM

ஆடி அமாவாசை விழாவையொட்டி மதுரை-ராமேசுவரம் இடையே வருகிற 28-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கம்

மதுரை: மதுரை கோட்ட ரெயில்வே சார்பில், ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமேசு வரத்துக்கு வருகிற 28-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

அந்த வகையில், மதுரை - ராமேசுவரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் (வ.எண்.06907) மதுரையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு காலை 9.15 மணிக்கு ராமேசுவரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

special train,audi amavasai festival ,சிறப்பு ரெயில்,ஆடி அமாவாசை விழா

இதை அடுத்து மறுமார்க்கத்தில் ராமேசுவரம் - மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் (வ.எண்.06908) ராமேசுவரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு மதுரை வந்து சேரும்.

மேலும் இந்த ரெயில்கள் கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி போன்ற ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :