திருச்செந்தூர் செல்ல ஏதுவாக நெல்லைக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்
By: vaithegi Fri, 17 Nov 2023 09:58:45 AM
திருச்செந்தூர் : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு திருச்செந்தூர். இதைஆய்டுது இங்கு தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்திய மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் கூட ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இதனை அடுத்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கமான ஒன்று. இந்த திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்து முருகப் பெருமானை தரிசனம் செய்து செய்வார்கள்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி கடந்த 13ஆம் தேதி யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. நாளை கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடைபெற உள்ளது.
எனவே இதை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் கந்த சஷ்டி விழாவிற்கு, திருச்செந்தூர் செல்ல ஏதுவாக நெல்லைக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தஞ்சை வழியாக செல்லும் ரயில், எழும்பூரிலிருந்து இன்றிரவு 11.55க்கு புறப்படுகிறது.