Advertisement

கோட்டை ஸ்ரீ காளியம்மன் கோயிலில் சிறப்பு யாகம்

By: Nagaraj Mon, 23 Jan 2023 09:39:08 AM

கோட்டை ஸ்ரீ காளியம்மன் கோயிலில் சிறப்பு யாகம்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கோட்டை ஸ்ரீ காளியம்மன் கோயிலில் சிறப்பு யாகம் நடந்தது.

உலக அமைதி, கால்நடைகள் அபிவிருத்தி, தானியங்கள் விளைச்சல் அதிகரிக்க, மக்கள் நோய்கள், கஷ்டங்களிலிருந்து விடுபட வேண்டி "லலிதா திரிசதி" சிறப்பு யாகம் நடைபெற்றது.முன்னதாக கல்யாண விநாயகர், காளியம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று யாகம் தொடங்கியது.

special yagya,kalasabhishekam,decoration,devotees ,சிறப்பு யாகம், கலசாபிஷேகம், அலங்காரம், பக்தர்கள்

பூர்ணாஹூதி முடித்து அம்மனுக்கு கலசாபிஷேகம் செய்து, புஷ்ப அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. அபிஷேக, அலங்கார, ஆராதனைகளை கோவில் அர்ச்சகர் நாகராஜ சிவாச்சாரியார், பட்டீஸ்வரம் பிச்சை சிவாச்சாரியார், திட்டை குருமூர்த்தி உள்ளிட்டோர் செய்தனர்.

திருக்காட்டுப்பள்ளி டி.ஆர் ராஜா குழுவினரின் நாதஸ்வர கச்சேரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Tags :