Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி மலைப்பாதைக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

திருப்பதி மலைப்பாதைக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

By: vaithegi Wed, 16 Aug 2023 3:41:54 PM

திருப்பதி மலைப்பாதைக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

திருப்பதி :கைத்தடி, நேரக்கட்டுப்பாடு விதிப்பு ... திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் திருப்பதி மலைப்பாதை வழியாக நடைபயணமாக செல்கையில் வன விலங்குகளில் அச்சுறுத்தல் சமீப காலமாகவே உயர்ந்து கொண்டு வருகிறது.இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு தான் மலைப்பாதை வழியாக ஒரு தம்பதி தங்கள் குழந்தையுடன் சென்று கொண்டு இருக்கும் போது, வனவிலங்குகள் அந்த 6 வயது குழந்தையை இழுத்து சென்று உள்ளது. அதன் பின்னர் காட்டுக்குளிருந்து அந்த குழந்தை வனவிலங்குகள் தாக்கிய காயத்துடன் சடலமாக மீட்ட்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், வனவிலங்கு அச்சுறுத்தலை தவிர்க்க தற்போது திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதையடுத்து அதன்படி, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் மலைப்பாதை வழியாக செல்வோர் காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். பெரியவர்கள் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படுவர்.

restrictions,tirupati hill pass ,கட்டுப்பாடுகள் ,திருப்பதி மலைப்பாதை

அதே போன்று, இருசக்கர வாகனங்களில் செல்வோர் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை அனுமதிக்கப்படுவர். மேலும் பக்தர்கள் தனித்தனியாக செல்ல கூடாது என்றும் 100 பேர் உடன் ஒரு குழுவாக செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதே போல , மலைப்பாதை வழியாக செல்வோர்க்கு தற்காப்புக்காக 5 அடி உயர மர கைத்தடி வழங்கப்பட்டு வருகிறது. இதை கீழ் திருப்பதியில் மலைப்பாதை பக்தர்களுக்கு கொடுத்து விடுகிறார்கள். அதனை மேல் திருப்பதியில் வாங்கி கொள்கிறார்கள். அதே போல மேலிருந்து கீழ் செல்பவர்களுக்கு அந்த மரத்தடி கொடுக்கப்படுகிறது.

Tags :