Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதியில் சர்க்கரை இல்லாத லட்டு பிரசாதமா? ... தேவஸ்தானம் விளக்கம்

திருப்பதியில் சர்க்கரை இல்லாத லட்டு பிரசாதமா? ... தேவஸ்தானம் விளக்கம்

By: vaithegi Mon, 12 Sept 2022 3:21:48 PM

திருப்பதியில் சர்க்கரை இல்லாத லட்டு பிரசாதமா?  ...  தேவஸ்தானம் விளக்கம்

திருப்பதி: திருப்பதி கோவிலில் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை இல்லாத லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்ற தகவல் முற்றிலும் வதந்தி .... தேவஸ்தானம்

திருப்பதி என்றாலே அனைவரின் ஞாபகத்திற்கு வருவது அங்கு வழங்கப்படும் பிரசாதமான லட்டு தான். பெரும்பாலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் லட்டுகளை வங்கி செல்வர்.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை சேர்க்காத லட்டு பிரசாதமாக வழங்கப்பட உள்ளதாக சமூக ஊடங்களில் பல தகவல் பரவியது.

devasthanam,tirupati ,தேவஸ்தானம் ,திருப்பதி

இதனை அடைத்து இதற்கு மறுப்பு தெரிவித்த திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி லட்டு காப்புரிமை பெற்றது என்றும், சர்க்கரை சேர்க்காத லட்டு வழங்கினால் காப்புரிமையில் கேள்விகுறியாகி விடும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சர்க்கரை சேர்க்கப்படாத லட்டு வழங்கினால், அதன் பிறகு வேறு ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து, வேறு சில பக்தர்கள், வேறு சில பிரசாதங்களை கேட்பார்கள் என தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.

Tags :