Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருமலை கோயில் பிரமோற்சவத்தில் மோகினி அவதாரத்தில் மாடவீதிகளில் சுவாமி உலா

திருமலை கோயில் பிரமோற்சவத்தில் மோகினி அவதாரத்தில் மாடவீதிகளில் சுவாமி உலா

By: Nagaraj Fri, 20 Oct 2023 2:39:39 PM

திருமலை கோயில் பிரமோற்சவத்தில் மோகினி அவதாரத்தில் மாடவீதிகளில் சுவாமி உலா

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 5-வது நாளில் மோகினி அவதாரத்தில் மாடவீதிகளில் உலா வந்த மலையப்ப சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை தேவர்களுக்கு கொடுப்பதற்காக மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்தது பிரம்மோற்சவ நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது.

tirupati,temple,brahmotsavam,mayilatam,waiilatam,poikal horse ,திருப்பதி, கோயில், பிரம்மோற்சவம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை

தனது மோகினி அவதாரத்தை கிருஷ்ணராக மாறி மகாவிஷ்ணு ரசிக்கும் விதமாக மற்றொரு பல்லக்கில் மோகினியுடன் கிருஷ்ணரும் வீதி உலா வந்ததை பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

பிரம்மோற்சவ நிகழ்வில் மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கோலாட்டம் ஆடியபடி ஏராளமான பக்தர்கள் சுவாமி வீதிஉலாவில் பங்கேற்றனர்.

Tags :
|