Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி பிரம்மோற்சவத்தை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், 150 சிறப்பு பேருந்து இயக்கம்

திருப்பதி பிரம்மோற்சவத்தை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், 150 சிறப்பு பேருந்து இயக்கம்

By: vaithegi Sat, 03 Sept 2022 7:34:49 PM

திருப்பதி பிரம்மோற்சவத்தை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், 150 சிறப்பு பேருந்து இயக்கம்

திருப்பதி : இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. எனவே இதனால் தமிழகத்தில் மக்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல ஏதுவாக 150 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளது.

இதை அடுத்து திருப்பதி பிரமோற்சவ விழாவின் தொடக்க நாளான செப்டம்பர் 27ம் தேதி மாலை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சுவாமிக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்க உள்ளார். இதனை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில், அக்டோபர் மாதம் 1ம் தேதி இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெற உள்ளது.

special bus,brahmotsavam,tirupati , சிறப்பு பேருந்து,பிரம்மோற்சவம்,திருப்பதி

இதனைத்தொடர்ந்து அன்றைய தினம் புரட்டாசி 3வது சனிக்கிழமை என்பதால் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. எனவே இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் தமிழக அரசின் சார்பாக சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக திருமலைக்கு 30 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து காளஹஸ்தி வழியாக 55 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக 20 பேருந்துகள் மற்றும் வேலூர் சித்தூர் வழியாக திருப்பதிக்கு 65 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதையடுத்து கன்னியாகுமரி முதல் திருச்சி, சேலம், ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வேலூர் வழியாக சிறப்பு பேருந்துகளை திருப்பதிக்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி, குப்பம் வழியாக 15 பேருந்துகள், கள்ளக்குறிச்சியில் இருந்து 8 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Tags :