Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் திருவிழா தேரோட்டம்

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் திருவிழா தேரோட்டம்

By: Nagaraj Mon, 03 July 2023 10:30:55 PM

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் திருவிழா தேரோட்டம்

நெல்லை: பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த ஆண்டுக்கான ஆனிப்பெருந்திருவிழா, கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது.

இதனையொட்டி காலையில் சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சுப்பிரமணியர், விநாயகர் தேர்கள் இழுக்கப்பட்டன.

nellaiyapar,temple,chariot,pride,overweight ,நெல்லையப்பர், கோயில், தேரோட்டம், பெருமை, அதிக எடை

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

தேர் ரத வீதிகளில் வலம்வந்தபோது ‘ஓம் நமச்சிவாயா’ என விண்ணை முட்டும் கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நெல்லையப்பர் ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட மிகப்பெரிய தேர் என்னும் பெருமையைக் கொண்டதாகும்.

Tags :
|
|