Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • மச்சத்திற்கும் நம் வாழ்விற்கும் உள்ள இணைப்பு... தெரிந்து கொள்ளுங்கள்!!!

மச்சத்திற்கும் நம் வாழ்விற்கும் உள்ள இணைப்பு... தெரிந்து கொள்ளுங்கள்!!!

By: Nagaraj Sun, 14 June 2020 8:35:41 PM

மச்சத்திற்கும் நம் வாழ்விற்கும் உள்ள இணைப்பு... தெரிந்து கொள்ளுங்கள்!!!

நம் இந்தியாவில் ஒரு பழக்கம் உண்டு. யாருக்காவது பரிசோ அல்லது பெருந்தொகையோ கிடைத்து விட்டால். உனக்கு மச்சம்ய்யா. அதான் உடனே கிடைச்சிடுச்சு என்பார்கள்.

நினைத்த வேலை கிடைத்து விட்டால் உடம்பெல்லாம் மச்சம்யா. அவன் எந்த வேலைக்கு போகணும்னு நினைச்சானோ அதே கிடைச்சிடுச்சு என்பார்கள். மச்சத்திற்கும், நமக்கும் நடக்கும் விஷயங்களுக்கும் தொடர்பு இருக்கிறாதா என்றால் ஆன்மீக ரீதியாக உண்டு என்று கூறுபவர்கள் உள்ளனர்.

பெண்களின் பாதங்களில் பொதுவாகவே மச்சம் இருந்தால் நல்லது. இதனால், நினைக்கும் காரியங்கள் அனைத்தும் விரைவில் வெற்றி பெறும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மேலும், உறவினர்களின் அன்பும். ஆதரவும் பெறுவார்கள்.

mutiny,women,thought,happens,facilitated,spiritual ,மச்சம், பெண்கள், நினைத்தது, நடக்கும், வசதி, ஆன்மீகம்

பெண்களின் வலது பாதத்தில் இடப்புறம் மச்சம் இருந்தால் அவர்களுக்கு நடுத்தரமான வாழ்க்கை ‌அமையுமாம். அவர்களது வாழ்க்கையில் மனநிறைவு பெற்றால் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும், வலது பாதத்தில் வலப்புறம் மச்சம் இருந்தால், அவர்களுக்கு நல்ல கணவர் அமைவார். பிறந்த வீடு மற்றும் புகுந்த வீடு இரண்டிலுமே வசதியாய்‌, விரும்பும் நகைகளை வாங்கி அணிய வசதிகள் இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை வந்து சேரும். மேலும், இவர்களுக்கு கௌரவ பட்டங்கள் ‌இவர்களை தேடி வரும்.

மேலும், பெண்களுக்கு கால் முட்டிகளில் மச்சம் இருந்தால் எதிர்பார்ப்பதை விட அதிக வசதியுடன் வாழ்வார்கள். நன்மைகள் அதிக அளவில் நடைபெறும் என்கிறார்கள். ஆன்மீகமும், நம் வாழ்வும் பின்னி பிணைந்த ஒன்றுதானே. விபரமறிந்தவர்களின் கூற்றுக்கு நம்மவர்கள் எப்போதும் ஆதரவு அளிப்பதும் தெரிந்த விஷயம்தானே. நம் உடலும் ஆன்மீகத்துடன் இணைந்த ஒன்று என்பதால் இதை பலரும் நம்புகின்றனர்.

Tags :
|
|